உள்நாடு

துறைமுக நகரானது அரசியல் யாப்பிற்கு முரணானதா? [VIDEO]

(UTV | கொழும்பு) – துறைமுக நகரானது பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது அரசியல் யாப்புக்கு முரணானது இல்லையென சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தரவுக்கு அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் அறிவித்தலை மேற்கொள்காட்டி டெய்லி நியூஸ் பத்திரிகை 13 ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் எவ்வித தடைக்கோ அல்லது விதிக்கப்படவுள்ள வரையறைகளுக்கோ குறித்த சட்ட மூலமானது முரணானது அல்ல என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இதற்கு முன்னர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர சட்டமா அதிபரை அனுப்பி அறிவுறுத்திய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே சட்டமா அதிபர் குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

Related posts

பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

இனி மூன்று நிறங்களில் கடவுச்சீட்டுகள்