உள்நாடு

கடத்தப்பட்ட கார் மீட்கப்பட்டது

(UTV | கொழும்பு) – கடத்தப்பட்ட கார் ஒன்று காட்டுப்பகுதியில் விட்டுச் செல்லப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சேவைக்காக குறித்த கார் நேற்று இரவு வரவழைக்கப்பட்டுள்ளதுடன் இதன்போது ஓட்டுனரை தாக்கிவிட்டு குறித்த காரை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் குறித்த காரை பளை, ஐயக்கச்சி பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து பளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து குறித்த காரில் பயணித்த சந்தேக நபர்கள் ரந்தெனிய பகுதியில் வைத்து குறித்த காரை கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பை சேர்ந்த வியாபாரி ஒருவருடைய கார் ஒன்றே இவ்வாறு கடத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 25 வயதுடைய இளைஞர்கள் இருவரினால் குறித்த காரை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் குறித்த நபர்களை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

எதிர்வரும் 14-ம் திகதி வரை மின்வெட்டு இல்லை

இலங்கைக்கு நியூசிலாந்திடமிருந்து $500,000 உதவி

இன்று நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு