உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த இளைஞர்கள் அடையாளம்

(UTV | கொழும்பு) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்த இளைஞர்கள் இன்று அதிகவேக நெடுஞ்சாலையின் சுற்றுலா காவல்துறை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் 10 மணியளவில் குறித்த பிரிவில் முன்னிலையாகுமாறு கண்டி பொலிசார் ஊடாக அவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இளைஞர்கள் சிலர் நீல நிற கார் ஒன்றின் கதவுகளில் அமர்ந்தவாறு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் பயணிக்கும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தபால் நிலையங்களின் சேவைகள் இடைநிறுத்தம்

வரவு – செலவுத் திட்டம் 2021

மின்சார முச்சக்கரவண்டிகள் தொடர்பில் வெளியான தகவல்!