உள்நாடு

இன்று முதல் சமுர்த்தி வங்கிகளின் ஊடாக 5,000 ரூபா கொடுப்பனவு

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்திற்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தமிழ் சிங்கள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தக் கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படவுள்ளது. 7 பிரிவுகளின் கீழ் பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவை பெறும் குடும்பங்கள், விசேட தேவையுடையோரை கொண்ட குடும்பங்கள், சிறுநீரக நோய்க்கான கொடுப்பனவை பெறும் நபர்கள் உள்ள குடும்பங்களுக்கு இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. சுமார் 40 லட்சம் குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவைப் பெறவுள்ளனர்.

குறைந்த வருமானம் பெறுவோருக்கும், சமுர்த்தி உதவி பெறுவோருக்கும் வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை இன்று முதல் சமுர்த்தி வங்கிகளின் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐ.தே.கட்சியின் சின்னம் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை

வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்ட உலர் உணவு பொதிகள் மீட்பு – 3 பேர் கைது – மன்னாரில் சம்பவம்

editor

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!