வகைப்படுத்தப்படாத

´ஜீடி´ கைது

(UTV | கொழும்பு) –  முல்லேரியா பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சரத் குமார என்றழைக்கப்படும் ´ஜீடி´ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் உயிரிழந்த ´அங்கொட லொக்கா´ எனும் குற்றவாளியை முதல் முதலில் குற்றச் செயல்களுக்கு ஈடுபடுத்தியவர் இவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் அவரது வீட்டில் இருந்து பதுங்கு குழியில் பதுங்கி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம்

Navy arrests a person with ‘Ice’

நோட்டனில் ஆணின் சடலம் மீட்பு