வணிகம்

ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியில்

(UTV | கொழும்பு) –  இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் விற்பனை விலை மீண்டும் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இலங்கை ரூபாயின் விற்பனை விலை 202.88 ரூபாயாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அத்துடன் முதல் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 198.56 ரூபாயாக பதிவாகியுள்ளது.

 

Related posts

மலையக புகையிரத போக்குவரத்திற்காக 12 புகையிரத இயந்திரங்கள் கொள்முதல்

மெனிங் சந்தை : குலுக்கல் முறையில் வர்த்தகர்களைத் தெரிவு

சதொச கிளைகளில் சீனி விலை ரூபா 102