உள்நாடு

அகில இலங்கை மீனவர்கள் சங்கத்தின் எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –  இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்படுமாயின் கடும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை மீனவர்கள் சங்கத்தின் தலைவர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

நாட்டின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுப்படுவதற்கான அனுமதியை வழங்குவதற்காக சிலர் முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் உள்நாட்டு மீனவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

எனவே, இந்த செயற்பாடுகளுக்கு தமது சங்கம் கடும் எதிர்ப்பினை வெளியிடவுள்ளதாக அகில இலங்கை மீனவர்கள் சங்கத்தின் தலைவர் ரத்ன கமகே குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

editor

அறுகம்பே சம்பவம் சர்வதேச சதியா என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் – டலஸ் அழகப்பெரும

editor

வீடியோ | BREAKING NEWS – உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வௌியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

editor