கேளிக்கை

ரஜினிக்கு ‘தாதா சாகேப் பால்கே’

(UTV | இந்தியா) –  51-வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும் என இந்திய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.

இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்திய சினிமாத்துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருதாகும்.

ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கரீனா கபூரின் குழந்தையை கவனிக்கும் பெண்ணுக்கு இவ்வளவு சம்பளமா?

யூடியூபில் புதிய சாதனை படைத்த ‘வாத்தி கம்மிங்’

நயன் – சமந்தா உட்பூசல்