உள்நாடு

அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து

(UTV | கொழும்பு) – இன்று(30) நள்ளிரவு முதல் நாளை(31) நள்ளிரவு வரை அமுலாகும் வகையில் அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தபால் தொழிற்சங்கம் தீர்மானித்திருந்தது.

அஞ்சல் திணைக்களத்துக்கு ஊழியர்களை இணைத்துக் கொள்ளும்போது பின்பற்றப்படும் நடைமுறையிலுள்ள குழறுபடி உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தபால் தொழிற்சங்க தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்திருந்தார்.

 

Related posts

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் பிரதமர் ஹரிணி

editor

‘நெதுன்கமுவ ராஜா’ உயிரிழந்தது

மீண்டும் நாட்டை பாெறுப்பேற்க முடியுமான அணி பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் – ருவான் விஜேவர்த்தன

editor