உள்நாடு

கொழும்பு, கண்டி பிரதான வீதியில் வாகன நெரிசல் : அஜித்

(UTV | கொழும்பு) – கொழும்பு, கண்டி பிரதான வீதியின் வேவல்தெனிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு பஸ் ஒன்று லொறி ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வாகனங்கள் இன்று காலை வரை வீதியில் இருந்து அகற்றப்படாத காரணத்தால் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்க ஜனாதிபதி பணிப்பு

கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

இன்று முதல் பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் அதிகரிப்பு