உள்நாடு

அரசு தவறினால் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்களை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அரசு தவறிவிட்டால் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

தேவ ஆராதணை ஒன்றை அடுத்து மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எந்த சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் நியாயம் கிடைக்கும் வரையில் மக்களுடன் இருப்பதாகவும் நியாயம் நிலை நாட்டப்படுவதை பார்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மதுகமை பிரதேச செயலகப் பிரிவின் மூன்று பிரதேசங்களுக்கு பூட்டு

எதனோல் இறக்குமதிக்கு தடை [VIDEO]

இலங்கைக்கு வருகை தரவுள்ள சின்டி மெக்கெய்ன்