விளையாட்டு

சத்யன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி

(UTV |  இந்தியா) – சென்னையைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை உள்ளது.

இந்த ஒலிம்பிக்கில் விளையாட ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தகுதி பெற்றுள்ள நிலையில் இப்போது மற்றொரு வீரரான சத்யன் ஞானசேகரன் டேபிள் டென்னிஸ் பிரிவில் தேர்வாகியுள்ளார்.

இவர் காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டு ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் முதலில் மோதவுள்ள அணிகள்…

T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அட்டவணை

முகமது ஹபீசுக்கு கொரோனா ‘நெகடிவ்’