உலகம்

அஸ்ட்ரா ஜெனெகா குறித்து ஆலோசிக்க WHO கூடுகிறது

(UTV | ஜெனீவா) – அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி விவகாரம் குறித்து ஆலோசிக்க உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு இன்று(17) கூடி ஆலோசனை நடத்தவுள்ளது.

உலக அளவில் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுவரும் தடுப்பூசிகளில், ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசி முக்கியமானது.

இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு இரத்தம் உறைதல் ஏற்பட்டதாக தெரிவித்து, குறித்த தடுப்பூசிக்கு டென்மார்க், நோர்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் தற்காலிகமாக தடை விதித்து ள்ளன.

இதனால் ஏனைய நாடுகளிலும் இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி விவகாரம் குறித்து ஆலோசிக்க உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு இன்று கூட உள்ளது.

Related posts

கன்னி பயணத்தை ஆரம்பிக்கும் உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்!

இஸ்ரேலிய பெண் பணயக் கைதியை விடுதலை செய்த ஹமாஸ்

editor

இம்ரான் கானின் சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு!