உள்நாடு

சித்திரைப் புத்தாண்டுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் தேவை ஏற்படின் பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நத்தார் பண்டிகையின் பின்னர் நாட்டில் கொவிட்-19 தொற்று அதிகரித்திருந்தது. அதற்குக் காரணம், மக்கள் முறையாக சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறியமையே என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தலுக்காக விதிக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி

அருங்காட்சியகங்களுக்கு செல்ல முன்பதிவு செய்ய வேண்டும்

இளையராஜாவின் மகள் மரணம்! இலங்கையில் இளையராஜா