உள்நாடு

இன்றும் சில மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை

(UTV | கொழும்பு) – சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில பகுதிகளில் மற்றும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related posts

06ஆவது நூலை வெளியிட்ட இம்தியாஸ் பாக்கீர் மார்கார்

UNHRC 30/1 தீர்மானத்திலிருந்து விலக அமைச்சரவை அனுமதி

அரச ஊடகங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

editor