கிசு கிசு

முரளியின் தூஸ்ராவில் நாம் மயங்கினோம் : முரளி அரசின் 2 ஏக்கர் நிலத்தில் மயங்கினார்

(UTV | கொழும்பு) – முத்தையா முரளிதரன் இலங்கை அணிக்காக விளையாடியபோது அவரது பந்து வீச்சைப் பார்த்து மகிழ்ந்தோம், பாராட்டினோம். ஆனால், இன்று ராஜபக்சர்களுக்கு சோரம்போகும் விதத்தில் அவர் பந்து வீசுகின்றார்.

முரளிக்கு 2 ஏக்கர் காணியை அரசு வழங்கியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பொன்சேகா, முரளி மீது விமர்சனங்களை தொடுத்தார்.

அத்துடன் இந்த அரசை வீட்டுக்கு விரட்டியடிப்போம். எமது பக்கம் பலமானதொரு அணி இருக்கின்றது. 2025ஆம் ஆண்டளவில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமையும் எனவும் சரத் பொன்சேகா சூளுரைத்தார்.

 

Related posts

மேலும் இரு மரணங்கள் : PCR முடிவுகள் பிற்பகலில் வெளியாகும்

உண்மைக்கு புறம்பான தகவல்களை முன்னெடுப்போருக்கு சிறைத்தண்டனை

மதிய உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!