உள்நாடு

சாதாரண தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இம்மாத இறுதியில்

(UTV | கொழும்பு) – கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை சாதாரண தரப் பரீட்சையின் நுண் கலை செய்முறை பரீட்சையை மே மாதத்தில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, சாதாரண தரப் பரீட்சையை வெற்றிகரமான முறையில் நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் நன்றியை தெரிவித்தார்.

 

Related posts

சீமெந்து விலை மீண்டும் உயர்வு

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றும் விசேட கலந்துரையாடல்

அறநெறி பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பூட்டு