உள்நாடு

‘ரேவதா’ மர்மமான முறையில் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – கலா வாவிற்கும் பலலு வாவிற்கும் இடையிலான பள்ளத்தாக்கில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த ‘ரேவதா’ என்ற கம்பீரமான யானை நேற்று(09) உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சேனை பயிர்செய்கையை பாதுகாப்பதற்காக முறையற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கிய பின்னர் அந்த யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

43 வயதான ரேவதா யானை மன்னர் மந்தையின் மிகப்பெரிய யானை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் நடைமுறையில் உள்ள போக்குவரத்து வசதி

மீன்களுக்கு உணவு வழங்கிக்கொண்டிருந்த 9 வயது பிக்கு – குளத்தில் தவறி விழுந்து பலி

editor

தம்புள்ளை பிரதேச சபையின் எதிரணியினர் வெங்காய மாலை அணிந்து சபைக்கு சென்றனர்

editor