உள்நாடு

சுமார் 68 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது.

(UTV | மாத்தறை) – மாத்தறை – தெய்யந்தர – தெனகம பகுதியில் 68 கிலோகிராம் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் கார் ஒன்றில் பயணித்த போது பொலிசார் மேற்கொண்ட சோதனையின் போது நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதானவர்களில், ஆண் நீர்கொழும்பு கட்டானை பகுதியினையும், பெண் கண்டியை சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

A/L பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கான அறிவித்தல்

மத்திய நிலையங்களில் 1,630 பேர் தனிப்படுத்தப்பட்டுள்ளனர் 

பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை