உலகம்

மோடியும் குத்திக் கொண்டார்

(UTV |  இந்தியா) – இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் இந்திய பிரதமர் மோடி இன்று(01) கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில்,

“எய்ம்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்தேன். கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த எங்கள் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவான நேரத்தில் எவ்வாறு பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த குடிமக்கள் உள்ளிட்ட தடுப்பூசி எடுக்க தகுதியுள்ள அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சப்பட வேண்டாம். ஒன்றாக, இந்தியவை கொரோனாவில் இருந்து விடுவிப்போம்” என பதிவிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

அரச குடும்ப கடமைகளில் இருந்து விலகிய இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி

ஹஜ் யாத்திரையில் குழந்தைகளுக்கு அனுமதியில்லை

editor

ஆந்திரா விடுதியில் தீ விபத்து – கொரோனா நோயாளிகள் உட்பட 11 பேர் பலி