உள்நாடு

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

(UTV |  மட்டக்களப்பு) – கொவிட் – 19 தொற்றுப்பரவல் காரணமாக நாட்டின் பல பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், மட்டக்களப்பு – காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் இன்று(01) அதிகாலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மொஹினார் ஒழுங்கை, காபுர் வீதி, சின்னதோன வீதி, ரெலிகம் வீதி, முதலாம் குறுக்கு தெரு என்பன இன்று அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக குறித்த மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேர்தல் செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும்- மஹிந்த தேசப்பிரிய

பேக்கரி உணவுகளை கிராமங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை

அவதானம் மக்களே! காற்றின் மாசு அளவு இன்று அதிகரித்துள்ளது