உள்நாடு

‘ஆயிரம்’ இன்றும் சம்பள நிர்ணய சபை கூடுகிறது

(UTV | கொழும்பு) –  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக சம்பள நிர்ணய சபை இன்று(01) மீண்டும் கூடவுள்ளது.

கடந்த 8ஆம் திகதி கூடிய சம்பள நிர்ணய சபை, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை வேதனமாக 900 ரூபாவும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 100 ரூபாவும் சேர்த்து ஆயிரம் ரூபா நாளாந்தம் வழங்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

சம்பள நிர்ணய சபையானது, தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றின் தலா 8 பிரதிநிதிகளையும், அரசாங்கத் தரப்பினர் 3 பிரதிநிதிகளையும் கொண்டுள்ளது.

சம்பள நிர்ணய சபை கூடுவதற்கான குறைந்தப்பட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 5 ஆகும்.

அதில், தொழிற்சங்க பிரதிநிதிகள் இரண்டு பேரும், முதலாளிமார் சம்மேளனத்தின் இரண்டு பிரதிநிதிகளும், அரசாங்க பிரிதிநிதி ஒருவரும் உள்ளடங்க வேண்டும்.

சம்பள நிர்ணய சபையின் பிரதிநிதி ஒருவர், தொடர்ச்சியாக மூன்று பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதை தவிர்ப்பாராயின், அவரை நீக்குவதற்கும், புதிய பிரதிநிதியை நியமிப்பதற்கும் தொழில் அமைச்சருக்கு அதிகாரம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து.

உயர்தரப் பரீட்சை – இன்று நள்ளிரவுடன் மேலதிக வகுப்புகளுக்கு தடை

editor

இருபதுக்கு அமோக வெற்றி