உள்நாடு

இதுவரை இராஜினாமா செய்யவில்லை : சுமேத பெரேரா

(UTV | கொழும்பு) – விவசாய அமைச்சின் செயலாளர் பதவியை தாம் இதுவரை இராஜினாமா செய்யவில்லை என விவசாயம், மகாவலி, கிராமிய அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா தெரிவித்துள்ளார்.

இராஜினாமா தொடர்பில் இதுவரையில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், விவசாய அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதற்கான எண்ணம் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி P.B. ஜயசுந்தரவிடம் கடந்த 15 ஆம் திகதி தாம் தெளிவுபடுத்தியதாகவும் சுமேத பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐ.எஸ் நபர்கள் கைது: இலங்கை வரும் இந்தியாவின் பொலிஸ் பிரிவு

நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை செலுத்த அவகாசம்

இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

editor