உள்நாடு

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – கைது செய்யப்பட்டு பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சட்ட மா அதிபர் நேற்று (17) பொலிஸ்மா அதிபருக்கு வழங்கிய ஆலோசனைக்கு ஏற்ப சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாத உறுப்பினர் ஒருவருடன் நெருங்கி செயற்பட்டு, அவருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுடன் தடுத்து வைக்கப்பட்ட வண்ணாத்துவில்லு மதரஸா பாடசாலையின் அதிபர் மொஹமட் ஷகீர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கல்முனை மேலதிக பிரதேச செயலகம் விவகாரம் தொடர்பில் நிசாம் காரியப்பர் எம்.பி வெளியிட்ட தகவல்

editor

இந்தியா கொடுத்த கடனை அரசு ஏமாற்றி வருகிறது

தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை கையளிக்குமாறு அறிவிப்பு

editor