வணிகம்

சிவப்பு சீனி இறக்குமதியை நிறுத்த தீர்மானம்

(UTV | கொழும்பு) – சிவப்பு சீனி இறக்குமதியை நிறுத்துவதற்கு கரும்பு உள்ளிட்ட சிறுதோட்ட பயிர்ச்செய்கை அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புற தெரிவித்திருந்தார்.

இலங்கையில் வருடாந்தம் 6 இலட்சம் மெற்றிக் தொன் சீனிக்கான கேள்வி காணப்படுவதாகவும் அதில் 120,000 மெற்றிக் தொன் சிவப்பு சீனி எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

சீனி இறக்குமதிக்காக வருடாந்தம் செலவிடப்படும் 40 பில்லியன் ரூபாவை குறைத்துக் கொள்ளும் நோக்கில் இறக்குமதியை தடை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

அரிசியின் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை

2020 ஆம் ஆண்டளவில் மின்-வணிகம் ஊடாக 04 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை இலங்கை எட்டும்! மின்-வணிக நிபுணர்கள் தெரிவிப்பு!

பங்கு சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர்வு