உள்நாடு

நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

(UTV | கொழும்பு) – இன்று அதிகாலை 5 மணி முதல் நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

பொரளை பொலிஸ் அதிகார பிரிவுக்குட்பட்ட கோதமிபுர அடுக்குமாடி குடியிருப்பு தொகுதி, கோதமிபுர 24 மற்றும் 78 ஆம் தோட்டங்கள், வேலுவன வீதி என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

பூகொட பொலிஸ் அதிகார பிரிவுக்குட்பட்ட குமாரிமுல்ல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை பொலிஸ் அதிகார பிரிவின் கல்லொலுவ பகுதியின் ஜூம்மா மஸ்ஜிட் மாவத்தை, இத்ரா மாவத்தை, புதிய வீதி மற்றும் அகுரகொட என்பனவும் அம்பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவின் போலான தெற்கு பகுதியும் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஏப்ரல் 23 : எஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தல்

நாளை சஜித்தின் கூட்டணி அங்குரார்ப்பணம்: தமிழ்-முஸ்லிம்கள் கட்சிகள் புறக்கணிப்பு

கல்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியில் சாதனை

editor