உள்நாடு

இரு மாவட்டங்களுக்கான பாடசாலைகளை திறக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  கம்பஹா மாவட்டத்தில் 590 பாடசாலைகளில் 589 பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு திறக்க வாய்ப்பு காணப்படுவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கம்பஹா பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழுவினால் இது தொடர்பில் தெரியபடுத்தியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் கம்பஹா மாவட்டத்தில் 4 கல்வி வலயங்கள் உள்ளதாகவும், இதில் கம்பஹா வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனா பாடசாலைகள் திறக்கக்கூடிய நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 446 பாடசாலைகள் உள்ளதாகவும் அவற்றில் 442 பாடசாலைகள் திறக்கக்கூடிய நிலையில் உள்ளதாக களுத்துறை மாவட்டத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதமளவில்

ஐந்து மாவட்டங்களுக்கு தொடரும் முடக்கங்கள்

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களின் தேசிய எதிர்ப்பு தின போராட்டம்