வணிகம்

பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – பேக்கரி உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால், பாண், பணிஸ் உள்ளிட்டவை குறைந்தபட்சம் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“.. பார்ம் எண்ணெய்க்கு ஒரு லீற்றருக்கு 250 ரூபா வரி அறவிடப்படும் நிலையில், அதன் விலை 500 ரூபாவாகவும், மாஜரின் ஒரு கிலோவுக்கு 600 ரூபா வரி அறவிடப்படும் நிலையில் 1000 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளதால் பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்காமல் இருப்பது சாத்தியமற்றது..” என தெரிவித்தார்.

எவ்வாறாயினும் பேக்கரி பண்டங்களின் விலையை அதிகரிக்காமல் இருக்க, சலுகைகளைக்கோரி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கோரிக்கைகளை முன்வைத்த போதும் அவர்கள் அதற்கான எந்த பதில்களையும் இதுவரை வெளிப்படுத்தாமையால், பேக்கரி பண்டங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும்

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Viberஆல் privacy boost அறிமுகம்