உள்நாடு

பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று(18) இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 9.30 அளவில் இந்த விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை பாராளுமன்ற சபை அமர்வுகளை நடாத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்

அத்துடன் கொரோனா தொற்று அச்சநிலைமைக்கு மத்தியில் சபை அமர்வுகளை நடாத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் நம்பிக்கை இல்லை – தயாசிறி ஜயசேகர

கொள்ளுப்பிட்டியில் அதிக கொரோனா நோயாளிகள் 

ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர் ராஜினாமா

editor