உள்நாடு

தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள் இன்று(16) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எஹலிகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மின்னான, போபத் எல்ல, விலேகொட, அஸ்கங்குல மற்றும் யகுதாகொட ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பாணந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 675 கொடவத்த கிராம சேவகர் பிரிவு மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மக்கொன கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேகவர் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

மாணவி மரணம் – இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் எமக்கு வேண்டாம் – புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

editor

இறக்காமம் மண் வானை நிமிர்ந்து பார்க்கிறது; 19 வயதில் விமானியாய் பறக்கும் முஹன்னா மௌலானா!

இன்று 5 மணி நேர மின்வெட்டு