உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் : மனு விசாரணைக்கான திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் போதியளவு சாட்சிகள் கிடைக்கப்பெற்ற போதிலும் அதனை தடுத்து நிறுத்தாததன் ஊடாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கான திகதியை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியவர்களுக்கு எதிராக குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று (15) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அளுவிகார, சிசிர த ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, எல்.டீ.பீ தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ மற்றும் பிரீத்தி பத்மன் சூரசேன ஆகிய 7 பேர் கொண்ட நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த மனு தொடர்பான விசாரணைளை மார்ச் மாதம் 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் முன்னெடுப்பதாக நீதிபதிகள் குழு தெரிவித்திருந்தது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

Related posts

பிரதமருக்கு சத்திரசிகிச்சை

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 889 ஆக உயர்வு [UPDATE]

அம்ஷிகா மரணத்திற்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

editor