உள்நாடு

மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – ஆண்டிறுதி விடுமுறையின் பின்னர் மேல் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்று(06) முதல் ஆரம்பமாகின்றன.

எவ்வாறாயினும், நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டாலும், சுகாதார ஆலோசனைகள் பிரகாரம், சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் என அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மேல் நீதிமன்ற தகவல்கள் தெரிவித்தன.

அத்துடன் தற்போதைய கொரோனா பரவல் அச்சுறுத்தல் நீங்கும் வரையில், சந்தேக நபர்களை ஸ்கைப் ஊடாக மேற்பார்வைச் செய்தல், உள்ளிட்டவை தற்போதும் பின்பற்றப்பட்டுவரும். சுகாதார பாதுகாப்பு வழி முறைகளைப் பின்பற்றியே நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க கொழும்பு பிரதான நீதிவான், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பங்கேற்புடன், சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அம்பிகா சற்குணநாதன் பதவி இராஜினாமா

நேர்முக பரீட்சை நடத்தப்பட்டு நியமனங்களை வழங்க நடவடிக்கை – பிரதமர் ஹரிணி

editor

அக்கினியில் இருந்து மீண்ட 45 சடலங்கள் அடக்கம்