வகைப்படுத்தப்படாத

ஹங்வெல்லயில் இடம்பெற்ற பதறவைக்கும் கொள்ளை

(UDHAYAM, COLOMBO) – ஹங்வெல்ல – தித்தனிய பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நுழைந்த கொள்ளையர்கள் அங்கு கொள்ளையிட்டு சென்ற விதம் வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த 16 ஆம் திகதி இரவு இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு உந்துருளிகளில் துப்பாக்கியுடன், 4 பேர் கொள்ளையிட வந்துள்ளனர்.

இவர்கள் ரூபாய் 2 லட்சத்திற்கு அதிக பணத்தையும், ரூபாய் 60 ஆயிரம் பெறுமதியான சிகரட் தொகையையும், அந்த வர்த்தக நிலையத்தில் பணிப்புரிந்த பெண்ணின் 25 ஆயிரம் பெறுமதியான தங்க சங்கிலியையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்கள் வாத்துவ, களுத்துறை மற்றும் கொஸ்கம ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என காவற்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

திருமணத்துக்கு முன்பு கர்ப்பமான நேஹா…

England beat India for crucial win

டெங்கு நோய் பரவும் அபாயம்