விளையாட்டு

தனஞ்சய டி சில்வா டெஸ்ட் இலிருந்து நீக்கம்

(UTV | கொழும்பு) – தென் ஆபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாடியபோது உபாதைக்குள்ளான இலங்கை வீரர் தனஞ்சய டி சில்வா குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு விளையாட முடியாதுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், இத்தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் பங்குபற்ற மாட்டார் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் ஆபிரிக்காவின் செஞ்சூரியனில் நடைபெறும் இப்போட்டியின் முதல் நாளான சனிக்கிழமை தனஞ்சய டி சில்வா 79 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளையில் அவரின் தொடைப்பகுதியில் உபாதை ஏற்பட்டதால் ஆடுகளத்திலிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் களமிறங்கியுள்ள அஜந்த மென்டிஸ்!!

சாதனை படைத்த ரோஹித் சர்மா!

MCC இன் தலைமைப் பதவியை பொறுப்பேற்றார் சங்கக்கார