உலகம்

பிரான்ஸில் புதுவகை கொரோனா தொற்றுடன் முதலாவது நபர் அடையாளம்

(UTV | பிரான்ஸ்) –  பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் புதிய வகைக் கொரோனா வைரஸ் தொற்றுடன் தற்போது பிரான்ஸ் நாட்டில் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளாதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 19 ஆம் திகதி பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு வருகை தந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு புதியவகை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதியவகை வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகள் பயணத்தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புதிய வகைக் கொரோனா வைரஸ் தொற்று முதல்முறையாக ஜேர்மனியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குறித்த நபர் தமது இல்லத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதகவும் தெரிவிக்கப்படுகின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உலகின் முதற்தடவையாக ட்ரோனைப் பயன்படுத்தி ரமழான் மாத தலைப்பிறை பார்க்கும் துபாய்

editor

ஓக்லாந்து நகர முடக்கமானது மேலும் நீடிப்பு

பிரான்ஸ் பிரதமர் இராஜினாமா

editor