உள்நாடு

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம்

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்தில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை (21) மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான தீர்மானத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் அறிவிப்பார் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டார்.

கொரானா தொற்று ஒழிப்புடன், மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இருப்பு, ஒற்றுமை பற்றி வாய்கிழியப் பேசுவோர், சமூகப் பிரதிநிதித்துவங்களை ஒழிக்க முயற்சி – ரிஷாட்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]

ஓமானுக்கு பெண்களை கடத்திய அதிகாரிக்கு பிணை