உள்நாடு

பண்டிகை காலம் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

(UTV | கொழும்பு) – தற்பொழுது கொரோனா அச்சுறுத்தல் அதிகளவாகவுள்ள பகுதியில் உள்ள மக்கள் பண்டிகை காலப்பகுதியில் வெளியிடங்களுக்கு செல்வதை முடிந்தவரையில் குறைத்துக்கொள்ள வேண்டும் என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளதோடு வெளிமாவட்டங்களில் ஓரளவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

வெளியிடங்களுக்கு செல்வதாயின், அதாவது அத்தியவசிய தேவை இருக்குமாயின் மாத்திரம் வெளியே செல்லுமாறு நாம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

எனவே பண்டிகைக்காலங்களில் வேறு மாகாணங்களுக்கு பயணிக்கும் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை உரியமுறையில் பின்பற்றி செயற்படுமாறும் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முசலியை கைப்பற்றிய NPP – மக்கள் காங்கிரஸுக்கு உப தவிசாளர்

editor

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்கள்!

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு