உள்நாடு

அரச பேருந்து சேவையில் நாளை தொடக்கம் மாற்றம்

(UTV | கொழும்பு) –  பேருந்து பயணங்களின் போது நாளை(07) முதல் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

விசேடமாக பாடசாலை நேரங்களில் மற்றும் அலுவலக நேரங்களில் குறித்த முறையில் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பயணிகளை இருக்கையில் மாத்திரம் அழைத்துச் செல்வதற்கு கடந்த தினம் பேருந்து பயணக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், சில வீதிகளில் அதிகமான பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதாக தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

நாம் எழுத்து மூலம் அறிவித்துள்ளோம். அவ்வாறு செயற்படும் பேருந்துகள் பொறுப்பேற்கப்பட்டு தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று. அதேபோல் ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ISIS அமைப்பிற்கு ஆதரவளித்த இலங்கையர்கள் : அமெரிக்கா குற்றச்சாட்டு

கொடுங்கோலனின் நிழலில் வளர்ந்தோரை பாதுகாக்கும் ஆட்சியை தோற்கடிக்க வேண்டும் – ரிஷாட் எம்.பி

editor

அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்திட்டங்களையும் எதிர்க்கப் போவதில்லை [VIDEO]