உள்நாடு

வலு வலுவிழந்து விலகிச் செல்லும் புரேவி

(UTV | கொழும்பு) –  புரெவிச் சூறாவளி வலுவிழந்து தற்போது, நாட்டை விட்டு விலகிச் செல்கின்றது. எனவே,இதனால் சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறைவடைந்து வருவதைக் காணக் கூடியதாகவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங் களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் குறிப்பாக காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங் களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப் போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையில் அவசரகால நிலைமை : வர்த்தமானி வெளியானது

கனேமுல்ல சஞ்சீவவைக் கொன்ற துப்பாக்கிதாரி – படம் வௌியானது

editor

நாட்டில் இன்று 44 கொவிட் மரணங்கள் பதிவு