உள்நாடு

கொழும்பில் கொரோனா பரவல் குறைவடையலாம்

(UTV | கொழும்பு) –  கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் எதிர்வரும் காலங்களில் குறைவடையலாம் என தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அதன் பிரதான வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைகளின் அடிப்படையில், கொரோனா வைரஸ் தொற்றை பரப்புகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருக்கின்றமையை அவதானிக்க முடிவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

பி.சி.ஆர்.பரிசோதனைகளில், அவர்களது மாதிரிகளில் கொரோனா வைரஸின் செறிமானம் குறைவாக உள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் காலத்தில் கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பிரதான வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாது- பெருந்தோட்ட கம்பனிகள்

பிரதமர் ஹரிணி, இலங்கைக்கான ILO பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு

editor

தரம் 06 சேர்ப்பதிற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள்