உலகம்

ட்ரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா உறுதி

(UTV |  அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகமெங்கும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் அமெரிக்காவில் உச்சத்தை தொட்டுள்ளது. அமெரிக்காதான் உலகளவில் கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் உள்ள நாடாகும்.

அந்நாட்டின் ஜனாதிபதி ட்ர்மப்புக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பின்னர் சிகிச்சையில் அவர் நலமானார். இந்நிலையில் இப்போது அவரின் மூத்த மகன் டொண்டால்ட் ட்ரம்ப் ஜூனியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் வழிகாட்டுதலோடு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

Related posts

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தூதரகத்தின் அறிவிப்பு

பரிஸ் நகரில் பாரிய வெடிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு