உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 100 பேர் வீடுகளுக்கு

(UTV | கொழும்பு) – பலாலி வான்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 100 பேர் இன்றைய தினம் அங்கிருந்து வீடு திரும்பியுள்ளதாக இலங்கை வான்படை ஊடகப்பிரவு தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை கொத்தணியில் நேற்றைய தினம் 130 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 10 பேருக்கும், அவர்களுடன் தொடர்பினை பேணிய 120 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,721 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், கட்டார் மற்றும் குவைட் முதலான நாடுகளில் இருந்து நாடுதிரும்பி, தனிமைப்படுத்தப்பட்டிருந்த தலா ஒவ்வொருவருக்கும் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையின் நிலை குறித்து கிரிஸ்டலினா ஜோர்ஜீவா கவலை

மு.கா. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் வேண்டுகோள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திர கட்சி கதிரை சின்னத்தில் களமிறங்க தீர்மானம் – லசந்த அழகியவண்ண

editor