உலகம்

இந்தியா தாங்க முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும்

(UTV | கொழும்பு) – இந்தியா தாங்க முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே லடாக் எல்லையில் இந்தியா – சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதனால் போர் பதற்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் சீனா எல்லையில் ஊடுருவதால் பேச்சுவார்த்தைகள் பலனற்று போய்விடுகின்றன.

எனவே, இந்தியா சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கூடுதல் படைகளை குவித்து வருகிறது. அதிநவீன பீரங்கிகள், கனரக வாகனங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டு, எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அதிகாரப்பூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ், இந்தியத் தரப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டால், அந்நாடு தாங்க முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து செய்தி வெளியிட்டுள்ளது.

சீன இராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடக்க இந்தியா அனுமதித்தால், அது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் இது இந்தியாவுக்கும் ஆபத்தாக முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சீனாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பரப்பும் கணக்குகள் 170 000 நீக்கம் : டுவிட்டர் அதிரடி

அகதிகள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்ததில் 20 பேர் பலி

editor

COVID 19 : சுமாா் 6.6 கோடி பேருக்கு தொற்று