உள்நாடு

மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளிலும் களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லமிற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரங்கள்

மூதூரில் படகு மூழ்கியதில் ஒருவர் காணாமல் போயுள்ளார்

editor

வீடியோ | முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை

editor