உள்நாடு

வீதி ஒழுங்கை சட்டம் நாளை முதல் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்படும் பஸ் முன்னுரிமை திட்டம் நாளை (14) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை(14) காலை 6 மணி முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 10 மணிவரை கொழும்பின் நான்கு பிரதான வீதிகளை மையப்படுத்தி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

காலி வீதி, ஹய்லெவல் வீதி, பேஸ்லைன் வீதி மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர – கோட்டே வீதிகளை மையமாக கொண்டு வீதி ஒழுங்கை சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு அமுல்படுத்தப்படும் வீதி ஒழுங்கு விதிகளை முறையான கடைப்பிடிக்காத சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்சார வேலிகளில் சிக்குண்டு 50 யானைகள் மரணம்

editor

சீனா பயணித்தார் ஜனாதிபதி அநுர

editor

மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கைக்கு