கிசு கிசு

மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை வெளிநாடுகளுக்கு செல்லத் தடை

(UTV | கொழும்பு) – மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து அரச அதிகாரிகளும் வெளிநாடுகளுக்கு செல்வதை இடைநிறுத்த நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை அடிப்படையாக கொண்டு இந்த தடையை விதிக்க நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தீர்மானித்துள்ளார்.

குறித்த தடை தொடர்பில் அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு நிதியமைச்சு கடிதம் ஊடாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தாண்டவமாடிய அலி சப்ரி

“CALLING BELL”அடித்து உரிமையாளரை அழைத்த முதலை

சபாநாயகர் பதவி மஹிந்தவுக்கு