உலகம்

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 95,735 பேருக்கு தொற்று

(UTV | இந்தியா) – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 95,735 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு 1,172 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, நேற்றைய தினம் (10) 8 மணி வரையிலான நேரத்தில் புதிதாக 95,735 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,465,864 ஆக அதிகரித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வெளியிட்ட தகவல்படி, வியாழக்கிழமை (செப். 10) வரை நாடு முழுவதும் 52,934,433 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மொத்த பாதிப்பு: 4,465,864
உயிர் பலி: 75,062
குணமடைந்தோர்: 3,471,784
சிகிச்சை பெற்று வருவோர்: 919,018

Related posts

தாய்லாந்திலும் கொரோனா தொற்றின் ஆதிக்கம்

புதிய வரிக் கொள்கையை 90 நாட்களுக்கு நிறுத்திய அமெரிக்கா

editor

2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டம் தாய்லாந்துக்கு!

editor