உள்நாடு

களுத்துறையில் 24 மணிநேர நீர்வெட்டு

(UTV | களுத்துறை) – களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம்(09) நள்ளிரவு 12 மணி முதல் 24 மணிநேர நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி வாதுவ, வஸ்கடுவ, பொதுபிடிய, மொல்லிகொட, மொரொன்துடுவ, நாகொட, களுத்துறை வடக்கு மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அவசர திருத்தப்பணிகள் காரணமாகவே இவ்வாறு குறித்த பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

புதனன்று ரணில் பதவியேற்பு

 நீர் விநியோகம் தடைப்படலாம்

விவசாய இரசாயனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை