உள்நாடுவணிகம்

முட்டை விலை ரூ. 2 இனால் குறைவு

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய முட்டையின் விலையானது நாளை(07) முதல் 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி வெள்ளை முட்டை மொத்த விற்பனை விலையாக 19 ரூபா 50 சதம் என்றும், சிவப்பு முட்டையின் விலை 20 ரூபா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெள்ளை முட்டை சில்லறை விலையாக 21 ரூபா என்றும், சிவப்பு முட்டை சில்லரை விலையாக 22 ரூபா என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மக்கள் மத்தியில் மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளது – சட்டத்தரணி அன்ஸில்

editor

அரசியலமைப்பின் 21வது திருத்தம் : SLPP ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

சஜித், அநுரகுமார ஒன்றாக – புகைப்படங்கள்