உள்நாடு

விஜயகலாவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனையும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கடந்த 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட குமரன் சர்வானந்தாவையும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த இருவரையும் எதிர்வரும் 17ம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சுன்னகம் காவல்துறையில் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஞானலிங்கம் மயூரன் ‘புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை’ தொடர்பில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த இருவரையும் வரவழைக்க ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையம் வருபவர்களுக்கான விசேட அறிவிப்பு

editor

ஓய்வூதியத்தை எதிர்பாத்திருந்த 2000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – கொடுப்பனவுகளை உடனடியாக வழங்குங்கள் – வன்னி எம்.பி துரைராசா ரவிகரன்

editor

அரசாங்க விடுமுறை தொடர்பான செய்தி உண்மைக்கு புறம்பானது